’பிரகதி’ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
New Delhi:
பயிர்க்கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை உத்தர பிரதேசம் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய வேளாண் அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் மிகத் தீவிரமாகியுள்ள காற்று மாசு பிரச்னையை அதிகாரிகள் தடுக்கத் தவறி விட்டதாக உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக புதன்கிழமை விமர்சித்திருந்த நிலையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும் முக்கிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கும் பிரதமர் மோடி தலைமையில் 'பிரகதி'ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி வழங்கியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\
விவசாயக் கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்குவதற்காக ஹரியானா, பஞ்சாப் அரசுகள் விவசாயிகளுக்கு மானியம் வழங்குகின்றன. உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மாநில விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதே டெல்லியின் காற்று மாசுக்கு காரணமாக கூறப்படுகிறது.