பாஜக எம்.பிகளுடன் பிரதமர் மோடி இன்று பேசினார். (File)
ஹைலைட்ஸ்
- பாஜக எம்.பிகளுடன் பிரதமர் மோடி இன்று பேசினார்.
- அமைதி, ஒற்றுமையை நிலைநாட்ட எம்.பிகளுக்கு அறிவுறுத்தல்.
- இந்த தத்துவங்களை நாடு முழுவதும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தல்
New Delhi: அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை குறித்து பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசத்தின் முன்னேற்றத்திற்கு இந்த தத்துவங்கள் அவசியமானது என்று கூறினார். மேலும், இந்த தத்துவங்கள் நாடு முழுவதும் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடி தனது கட்சித் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளே டெல்லி கலவரத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில், வன்முறை நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு பிரதமர் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த இந்த வன்முறைச் சம்பவத்தில் சுமார் 46 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
தேசத்தின் வளர்ச்சி முக்கியமானது, அந்த வளர்ச்சிக்கு அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை அவசியமானது. சிலர் தங்கள் கட்சிகளுக்காக வாழ்கிறார்கள், ஆனால் நாங்கள் நாட்டிற்காக வாழ்கிறோம் "என்று பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவின் "சபா விகாஸ், சப்கா சாத்" கோஷத்தை எடுத்துரைத்தார்.
இதேபோல், பிரதமர் மோடி தனது பிரச்சார உரையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தாக்கி, காங்கிரஸ் மூத்த தலைவர் "பாரத் மாதா கி ஜெய்" போன்ற கோஷங்களை எழுப்பத் தயங்குவதாகவும் கூறியிருந்தார்.