ஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரையாற்றியபோது எடுத்த படம்.
Untied Nations: உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று ஐ.நா.சபையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது-
உலக மக்கள் அனைவருக்கும் தீவிரவாதம் என்பது மிகப்பெரும் பிரச்னையாக, சவாலாக உள்ளது. இதனை உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்ப்பது அவசியம்.
இந்தியா என்பது உலகுக்கு அமைதியின் செய்தியாக வந்த புத்தரை அளித்த நாடு. யுத்தம் போதிக்கும் நாடு அல்ல. சுவாமி விவேகானந்தர் உலகுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை அளித்தார். பிரிவினையை அல்ல.
உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியா, இன்றும் சுவாமி விவேகானந்தர், புத்தரின் கொள்கைகளான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பின்பற்றி வருகிறது.
இவ்வாறு மோடி பேசினார். பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக ஒரு நாடு செயல்பட்டு வருவதாக ஐ.நாவில். பேசினார். தீவிவாதத்தை தவிர்த்து தூய்மை இந்தியா திட்டத்தை ஐ.நாவில் மோடி எடுத்துரைத்தார்.
இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை இந்தியா திட்டம் உலகம் முழுவதும் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதல் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது என்பதை சுட்டிக் காட்டிய மோடி, அதற்கு இந்தியா காரணம் அல்ல என்றாலும், புவி வெப்பமயமாதலை எதிர்கொள்ள இந்தியா பெரும் பங்கு ஆற்றி வருவதாக எடுத்துரைத்தார்.