Read in English
This Article is From Nov 18, 2018

மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

சீனாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அப்துல்லா யமீனின் ஆட்சி கடந்த செப்டம்பர் மாதத்தின்போது முடிவுக்கு வந்தது.

Advertisement
உலகம்

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் உடன் பிரதமர் நரேந்திர மோடி

New Delhi:

மாலத்தீவின் புதிய அதிபராக முகமது சாலிஹ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மாலத்தீவு நாட்டிற்கு கடந்த சில ஆண்டுகளாக இந்திய பிரதமர்கள் யாரும் செல்லவில்லை.

கடந்த 2011 நவம்பர் மாதத்தின்போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மாலத்தீவுக்கு சென்றார். மாலத்தீவு அதிபரின் பதவியேற்பு விழா குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “சமீப காலமாக மாலத்தீவில் நடைபெற்ற தேர்தல் மக்களின் எண்ணங்களை பிரதிபலித்துள்ளது. மாலத்தீவில் ஜனநாய ஆட்சி நிலைபெற வேண்டும் என இந்திய விரும்புகிறது” என்று கூறியுள்ளார்.

மாலத்தீவில் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் சீனாவுக்கு கடந்த ஆண்டுகளில் ஆதரவு தெரிவித்து வந்த அதிபர் அப்துல்லா யமீன் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் நாட்டின் புதிய அதிபராக முகமது சாலிஹ் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த அக்டோபர் மாதத்தின்போது மாலத்தீவு முன்னாள் அதிபர் மமூன் கயூம் கூறுகையில், மாலத்தீவு அரசியலில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்கிறது என்றார். கடந்த பிப்ரவரி மாதத்தின்போது மாலத்தீவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. சில எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

இந்த நிலையில் பிரதமர் மோடியின் மாலத் தீவு பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன மற்றும் இலங்கையின் நடவடிக்கைகளால் மாலத்தீவுடன் இந்தியா நெருக்கம் காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement