This Article is From Mar 19, 2020

கொரோனா பாதிப்பை எதிர்கொள்வது குறித்து நாட்டு மக்களிடையே இன்று பிரதமர் உரையாற்றுகிறார்

COVID-19 க்கு தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சிகளை மறு ஆய்வு செய்வதற்காகப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு இந்த உரையை அவர் நிகழ்த்தவுள்ளார்.

கொரோனா பாதிப்பை எதிர்கொள்வது குறித்து நாட்டு மக்களிடையே இன்று பிரதமர் உரையாற்றுகிறார்

COVID-19 க்கு தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சிகளை மறு ஆய்வு செய்வதற்காக நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமையேற்றார்

ஹைலைட்ஸ்

  • PM chaired high-level meeting on coronavirus on Wednesday evening
  • India has seen 151 cases so far and three patients have died
  • WHO has praised India's commitment to combat the novel coronavirus
New Delhi:

உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று  மற்றும் அதை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார். 

COVID-19 க்கு தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சிகளை மறு ஆய்வு செய்வதற்காகப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு இந்த உரையை அவர் நிகழ்த்தவுள்ளார். நாட்டில் இதுவரை 151 கொரோனா வைரஸ் பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டிருக்கின்றனர். மேலும், மூன்று நோயாளிகள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, மக்களை விழிப்படையச் செய்யவும், பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் திட்டத்தை வகுத்துள்ளது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வைரஸுக்கு எதிரான தயார்நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்ததாகச் செய்திகள் தெரிவித்தன. விவாதிக்கப்பட்ட திட்டங்களில் சோதனை வசதிகளை மேலும் மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனியார் ஆய்வகங்களை ஈடுபடுத்த ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும், அவற்றை ஈடுபடுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இது ஒரு "வளர்ந்து வரும் சூழ்நிலை" என்று சுகாதார அமைச்சகம் நேற்று கூறியிருந்தது. மேலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு நிகழ்விற்கும் அரசு தயாராக இருக்க முயல்கிறது.

வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தனியார் ஆய்வகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சமூக வதந்திகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் முயல்கிறது – பரவி வரக்கூடிய நோய்த் தொற்று சங்கிலியை உடைப்பதற்கான ஒரே வழியாக இது கருதப்படுகிறது.

கடந்த வாரங்களில், பல்வேறு மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களை மூடிவிட்டன. மால்கள் மற்றும் மல்டிபிளெக்ஸ், விளையாட்டு கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை ரத்துசெய்து, மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தினர். அனைத்து நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் ஆகியவற்றை மத்திய அரசு மூடியுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளன, சில மாநில அரசுகளும் இதேபோன்ற நடவடிக்கையைப் பரிசீலித்து வருகின்றன.

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"உயர்மட்டத்திலிருந்து இந்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு - பிரதமர் அலுவலகம் - மகத்தானது, மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்தியா மிகச் சிறப்பாகச் செயல்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்" என்று இந்தியாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ஹென்க் பெக்கடம் கூறினார்.

"பல்வேறு மாநில அரசுகள், மருத்துவ சகோதரத்துவம், துணை மருத்துவ ஊழியர்கள், ஆயுத மற்றும் துணை ராணுவப் படைகள், விமானத் துறையுடன் தொடர்புடையவர்கள், நகராட்சி ஊழியர்கள்” என COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் உள்ள அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

.