2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதகளிலும் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த முன்னர் அறிவித்திருந்தார்.
Chennai: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இன்று செய்தியாளர்களை சந்தித்து, “பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்கிறேன்” என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.
மேலும் அவர், “பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு போல ராஜீவ் காந்தி போல வசீகரமான தலைவர்.
இந்த வெற்றியானது மோடிக்குக் கிடைத்த வெற்றியாகும்” என்று பேசியுள்ளார்.
மோடி பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி மட்டும்தான், அழைப்பை ஏற்றுக் கொண்டதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தற்போது நிலவி வரும் குழப்பம் குறித்துப் பேசியுள்ள ரஜினிகாந்த், "ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகக் கூடாது. தன்னால் சாதிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்ட வேண்டும். ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியைப் போல எதிர்க்கட்சியும் வலுவாக இருக்க வேண்டும்" என்றார்.
2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதகளிலும் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அவர், அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.