இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் வர்தமனை பிரதமர் மோடி பாராட்டினார்.
New Delhi: எதிர்கட்சியனரை கடுமையாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, தங்கள் அறிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு உதவுது போல் பேசி இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கின்றனர். சில கட்சிகள் மோடி வெறுப்பு என்று கூறி நாட்டையே வெறுத்து வருகின்றனர். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பதில் தாக்குதலை உலகமே பாராட்டி வருகிறது என்று கன்னியாகுமரியில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ரூ.40 ஆயிரம் கோடி குமரி மாவட்ட மக்களுக்கான பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று குமரி மாவட்டம் வந்தார். அப்போது, திட்டத்தை துவங்கி வைத்து பேசிய அவர், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா. மக்கள் விரும்புவது முன்னேற்றத்தை, வாக்கு வங்கி அரசியலை அல்ல. மக்கள் குடும்ப அரசியலை விரும்பவில்லை, முன்னேற்றத்தையும், நேர்மையான அரசியலையும் விரும்புகிறார்கள்.
மக்களின் வாக்குகளை பெற்ற முந்தைய அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. விவசாயிகளுக்கு எதுவும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் கடனை தள்ளுபடி செய்வோம் என்கிறார்கள். அண்மையில் ராணுவத்தின் செயல்பாடுகள் அதன் வலிமையை எடுத்து காட்டுவதாக உள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. நாடே பாராட்டினாலும் சிலர் ராணுவத்தின் நடவடிக்கைகளை சந்தேகிக்கிறார்கள் என்று கூறினார்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகள் முகாமை அழித்தது. இதையடுத்து, எல்லை கட்டுப்பாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ நிலையங்களை நோக்கி தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்தியா பதில் தாக்குதல் நடத்த முயன்ற போது, இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கினார். இதைத்தொடர்ந்து அவர் 3 நாட்களாக பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டார்.
இதன் பின்னர், இன்று அபினந்தனை பாகிஸ்தான் விடுவிப்பதாக அறிவித்துள்ளது. இந்திய பாகிஸ்தான் மோதலை பாஜக தேர்தல் பிரசாரமாக பயன்படுத்தி வருகிறது என எதிர்கட்சியினர் பிரதமர் மோடி மீதும் பாஜக மீதும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.