பிரதமர் மோடி உள்ளிட்ட உள்ளிட்ட 6 பேருக்கு "சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது
United Nations: சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமை ஏற்று நடத்துவதற்காகவும் , வரும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதியேற்றதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐ.நா. சபையின் உயரிய விருதான சுற்றுச்சூழல் ( UN environment award) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்காற்றி, சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட உள்ளிட்ட 6 பேர் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கும் "சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்' என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண, பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டவர்களை கவுரவப்படுத்தும் வகையில் இந்த விருது அவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது
மேலும், உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் சூரியமிசக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்துக்கும் விருது வழங்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது