This Article is From Jun 15, 2019

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: மோடியும், இம்ரான் கானும் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்!

உலக நாட்டு தலைவர்கள் சந்தித்துக்கொள்ளும் போது, இருநாட்டு பிரதமர்கள் நலம் விசாரித்துக்கொள்வது சாதாரண விஷயம் தான் என தகவல்கள் கூறுகின்றன.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: மோடியும், இம்ரான் கானும் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்!

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் மோடியும், இம்ரானும் கானும் சந்தித்துக்கொள்வது இதுவே முதல்முறை.

ஹைலைட்ஸ்

  • உலக நாட்டு தலைவர்கள் சந்தித்துக்கொள்ளும் போது, நலம் விசாரிப்பது வழக்கமானத
  • இந்தியா எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாது என மாநாட்டிற்கு செல்லும் முன்பே
  • வியாழனன்று நடந்த சந்திப்பின்போது, எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
New Delhi:

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், இந்த மாநாட்டின் இரண்டவாது நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக நாட்டு தலைவர்கள் சந்தித்துக்கொள்ளும் போது, இருநாட்டு பிரதமர்கள் நலம் விசாரித்துக்கொள்வது சாதாரண விஷயம் தான் என தகவல்கள் கூறுகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு - காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு, பின்னர் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுன் கானும் சந்தித்துக்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

முன்னதாக, இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வழியாக செல்லாமல் ஓமன், ஈரான் வான் வழியாக பிஷ்கெக் சென்றார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த மோடி, தீவிரவாத அமைப்புகள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்த நாட்டுடன் பேச்சு வார்த்தை தொடர முடியும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே, கடந்த வியாழனன்று, கிர்கிஸ்தான் நாட்டு அதிபர் சூரான் பே, ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும் பங்கேற்ற நிலையில், இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவித்தன.

bl2lbbig

மாநாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திக்காமல் பிரதமர் மோடி தவிர்த்ததாகவும், மோடி அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து மூன்று இருக்கை தள்ளி இம்ரான் கான் அமர்ந்திருந்த போதும் அவரை சந்தித்து கை குலுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவித்தன.

இதேபோல், நேற்றைய தினம் இம்ரான்கானுடனான சந்திப்பிற்கு முன்னதாக மாநாட்டில் பிரதமர் மோடி பேசியபோது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது. இதன் செயல்பாட்டில் இந்தியா தனது பங்களிப்பை உறுதி செய்துள்ளது.

இலங்கையில் குண்டுவெடிப்பு நடைபெற்ற தேவாலயத்தை பார்வையிட்ட போது தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன். தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள இணைந்து செயல்பட மனிதாபிமான சக்திகள் முன்வர வேண்டும்.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, நிதி, ஊக்கம் அளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும். இந்த போரில், அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

(With inputs from PTI and IANS)

.