Kathmandu: பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு நேற்று சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டு நாட்களாக நீடித்து வரும் இந்தப் பயணத்தில், பல நாட்டுத் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடி வருகிறார்.
மேலும், நேபாள பிரதமர் ஷர்மா ஒலியுடன் இரு நாட்டு உறவு குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம், மியான்மர், இந்தியா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து மற்றும் பூட்டான் ஆகிய 7 நாடுகள் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளும். இந்த மாநாட்டின் நோக்கம், ‘அமைதியாக, வலமாக வங்க கடலை நிர்வகிப்பது’ ஆகும்.
லைவ் அப்டேட்ஸ்:
மதியம் 12:41-
காலை 11:34- பிம்ஸ்டெக் மாநாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மியன்மர் அதிபர் வின் மின்டை சந்த்தார். ‘இந்த சந்திப்பில் வளர்ச்சி குறித்தும் இரு நாட்டு உறவு குறித்தும் பேசப்படும்’ என்று வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
காலை 11:30- பிரயாத் சான்-ஓ-சா-வுடன் சந்திப்பு நன்றாக சென்றது. தாய்லாந்துடன் இந்தியா நல்லுறவை பேணுவது குறித்து பேசினேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காலை 11:28- தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்.
காலை 11:19- பிம்ஸ்டெக் மாநாட்டுக்கு வந்த மற்ற நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி.