This Article is From Jan 19, 2019

நாட்டின் முதல் தனியார் துப்பாக்கி தொழிற்சாலை - மோடி திறந்து வைத்தார்

லார்சன் & டார்போ நிறுவனம் கே 9 வஜ்ரா - 155 எம்.எம்./ 52 காலிபர் திறன் கொண்ட 100 டாங்குகளை இந்திய ராணுவத்திற்கு தயாரித்து வழங்குகிறது.

நாட்டின் முதல் தனியார் துப்பாக்கி தொழிற்சாலை - மோடி திறந்து வைத்தார்

துப்பாக்கி தொழிற்சாலையை திறந்து வைத்து அங்குள்ள ராணுவ டாங்கை பார்வையிடும் மோடி

Hazira, Gujarat:

நாட்டின் முதல் தனியார் துப்பாக்கி தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். லார்சன் & டார்போ எனப்படும் எல் அண்டு டி நிறுவனத்தின் கிளையாக துப்பாக்கி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 


குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் ஹாசிரா என்ற இடத்தில் இந்த துப்பாக்கி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் தனியார் துப்பாக்கி தொழிற்சாலையான இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 
 

துப்பாக்கி மட்டுமல்லாமல், ராணுவ டாங்குகள், பீரங்கி போன்ற ஆயுதங்களை தயாரித்து வழங்கும் பணியில் எல் அண்டு டி நிறுவனம் செயல்படுகிறது. 


லார்சன் & டார்போ நிறுவனம் கே 9 வஜ்ரா - 155 எம்.எம்./ 52 காலிபர் திறன் கொண்ட 100 டாங்குகளை இந்திய ராணுவத்திற்கு தயாரித்து வழங்குகிறது. இதற்கான ரூ. 4,500 கோடி ஒப்பந்தத்தை கடந்த 2017-ல் இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. 
 

.