This Article is From Nov 23, 2018

பைப் வழியே சமையல் கேஸ் சப்ளை செய்யும் திட்டம் - மோடி தொடங்கி வைத்தார்

தற்போது நாடு முழுவதும் 32 லட்சம் கேஸ் இணைப்புகள் உள்ளன. இந்த எண்ணிக்கை விரைவில் 2 கோடியை எட்டும் என்கிறார் மோடி

பைப் வழியே சமையல் கேஸ் சப்ளை செய்யும் திட்டம் - மோடி தொடங்கி வைத்தார்

சமையல் எரிவாயு இணைப்புகள் 2 கோடியை எட்டும் என்கிறார் மோடி.

New Delhi:

பைப் வழியே சமையல் கேஸை சப்ளை செய்யும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் நாடு முழுவதும் 18 மாநிலங்களையும், 129 மாவட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. 

நாட்டின் மக்கள் தொகையில் 4-ல் ஒருபங்கை இந்த திட்டம் உள்ளடக்குவதாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் சேலம் மற்றும் கோவை நகரங்கள் இந்த திட்டத்தின்கீழ் வருகின்றன. 

திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி கூறுகையில், “ நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்த திட்டம் முக்கிய அம்சம் ஆகும். பைப் லைன் மூலம் கேஸ் விநியோகிக்கும் திட்டம் விரைவில் 400 மாவட்டங்களில் கொண்டு வரப்படும். 

இது நாட்டின் 70 சதவீத மக்கள் தொகையை உள்ளடக்கியதாகும். கேஸ் இணைப்புகளின் எண்ணிக்கை விரைவில் 2 கோடியை எட்டும்.” என்றார். தற்போது நாடு முழுவதும் 32 லட்சம் கேஸ் இணைப்புகள் உள்ளன. 

.