Read in English
This Article is From Sep 01, 2018

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

17 கோடி போஸ்டல் சேமிப்பு வங்கி கணக்குகள் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியுடன் இணைக்கப்படும்.

Advertisement
இந்தியா
New Delhi:

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் சேவையை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. கிளைகள் ரீதியாக இந்தியாவின் மிகப் பெரிய வங்கியாக இது இருக்கும். இந்த வங்கி, மற்ற வங்கிகளைப் போலவே இயங்கும். ஆனால் கடன் கொடுக்கவோ, கிரெடிட் கார்டு கொடுக்கவோ முடியாது. பிரதமர் தொடக்கி வைத்ததும், நாடு முழுவதும் உள்ள 650 கிளைகளில் இதன் செயல்பாடு தொடங்கும். இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களையும் பயன்படுத்தி, கிராமப்புறங்களில் வங்கி சேவைகளை விரிவுபடுத்த இந்த பேமென்ட்ஸ் வங்கி பயனளிக்கும் என பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

பேமென்ட்ஸ் வங்கி குறித்து தெரிந்து கொள்ள 10 தகவல்கள்

  1. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வங்கி சேவையை இந்த இந்தியா போஸ்ட் சேவை மூலம் கொண்டு செல்வோம் . ஒவ்வொரு இந்தியரின் வீட்டு வாசலுக்கே வங்கி சேவைகள் வரும் “ என பிரதமர் மோடி, தொடக்க விழாவில் உரையாற்றினார்.
  2. இந்தியாவில் உள்ள 1.55 லட்சம் தபால் நிலையங்களும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியுடன் இணைக்கப்படும்
  3. இந்திய அரசிடம் இருந்து இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிக்கு 1,435 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி, பேடிஎம் ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிட இந்த நிதி உதவும்.
  4. சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, பண பரிமாற்றம், வங்கி கணக்குகளுக்கு நேரடி மானியம் பெறும் அம்சம், பில் மற்றும் மற்ற பேமென்ட்களை இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் செய்யலாம்.
  5. இந்த பேமென்ட்ஸ் வங்கியின் சேவையை தபால் நிலைய கவுன்டர்கள், ஏ.டி.எம்கள், மொபைல் பேங்கிங், எஸ்.எம்.எஸ் மற்றும் குரல் பதிவு மூலம் பயன்படுத்தலாம்.
  6. ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில், இந்த பேமென்ட்ஸ் வங்கியின் பலம், அதனிடம் உள்ள 3 லட்சம் ஊழியர்கள் என்கின்றனர். இவர்களால் டிஜிட்டலாகவும், நேரடியாகவும் சேவை வழங்க முடியும்.
  7. இந்த பேமென்ட்ஸ் வங்கி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சோதனை முயற்சியாக இரண்டு கிளைகளில் தொடங்கப்பட்டது. சட்டிஸ்கரின் ராய்பூர் மற்றும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் சோதனை செய்யப்பட்டது.
  8. ஒரு லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்களை இந்த பேமென்ட்ஸ் வங்கியில் செய்யலாம். மேலும், பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் ஏஜென்டாகவும் செயல்படும்.
  9. 17 கோடி போஸ்டல் சேமிப்பு வங்கி கணக்குகள் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியுடன் இணைக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்களை சேர்க்கும் பணியும், செலவும் தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் குறைகிறது.
  10. மக்கள் எளிதில் பயன்படுத்தக் கூடிய, குறைந்த செலவிலான நம்பிக்கையான வங்கியாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.
Advertisement