This Article is From Aug 23, 2019

3 நாடுகள் சுற்றுப் பயணம் : பிரான்ஸ் பிரதமருடன் மோடி முக்கிய பேச்சுவார்த்தை!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் 'Order of Zayed' எனப்படும் மிக உயரிய விருது வழங்கப்பட உள்ளது. நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் மோடி நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.

3 நாடுகள் சுற்றுப் பயணம் : பிரான்ஸ் பிரதமருடன் மோடி முக்கிய பேச்சுவார்த்தை!

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கிறார்.

Paris:

பிரதமர் மோடியும், பிரான்ஸ் பிரதமர் எடோர்ட் சார்லஸ் பிலிப்பும் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நேற்று இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடந்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது முதல் பயணமாக பிரான்ஸ் சென்றிருக்கும் மோடி நேற்று அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார். 

முன்னதாக இந்திய மற்றும் பிரான்ஸ் உயர் அதிகாரிகள் பல்வேறு துறை தொடர்பாக ஆலோசனை நடத்தினர். மோடி - மேக்ரான் சந்திப்புக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

பிரான்ஸ் பயணத்தின் தொடர்ச்சியாக பிரதமர் மோடி இன்று அந்நாட்டின் பிரதமர் சார்லஸ் பிலிப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டின் உயரிய விருதான 'Order of Zayed' விருது மோடிக்கு வழங்கப்படவுள்ளது. 

தனது ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் முக்கிய நிகழ்வாக வெளிநாடுகளிலும் பணமில்லா பரிவர்த்தனை செய்ய பயன்படும் ரூபே முறையை தொடங்கி வைக்க உள்ளார். இதன்பின்னர் பஹ்ரைனுக்கு செல்லும் மோடி அங்கு அந்நாட்டு அரசர் ஷேக் ஹமாத் பின் இசாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

பஹ்ரைனில் ஸ்ரீநாத்ஜி கோயில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பார்வையிடும் மோடி ஞாயிறன்று பிரான்சில் நடைபெறும் ஜி7 நாடுகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 
 

.