தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மற்றும் சூகி ஆகியோர் இந்த சந்திப்பை நிகழ்த்தினர்.
Bangkok: பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக் கிழமை மியான்மரின் மாநில ஆலோசகர் ஆங் சான் சூகியுடன் ஒரு “ஆக்கப்பூர்வமான சந்திப்பை நிகழ்த்தினார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மற்றும் சூகி ஆகியோர் இந்த சந்திப்பை நிகழ்த்தினர்.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ட்விட்டரில், ஆக்கப்பூர்வமான சந்திப்பு என்று கூறியுள்ளார். பிரதமர் மோடியும் மியான்மரின் மாநில ஆலோசகர் தாவ் ஆங் சான் சூகியுடன் திறன் மேம்பாடு, இணைப்பு மற்றும் மக்களுடனான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.
சந்திப்பில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து பேசப்பட்டதா என்பது குறித்து ஏதும் தெரியவில்லை.
ராணுவ ஒடுக்குமுறையைத் தொடர்ந்து பெரிய அளவிலான வன்முறைகளுக்குப் பின்னர் 2017 முதல் 7,00,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியானமரின் ராகைன் மாநிலத்திலிருத்து வெளியேறியதாக கூறப்பட்டது. இதனால் அண்டை நாடான பங்களாதேஷில் அகதிகளினால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.