This Article is From May 26, 2020

லடாக்கில் சீனா அத்துமீறல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மோடி ஆலோசனை

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, 100 கூடாரங்களை சீன ராணுவம் அமைத்து வருவதாகவும், பதுங்குக் குழிகள் அமைக்கும் நோக்குடன் கன ரக இயந்திரங்களை கொண்டு வந்துள்ளன. இதற்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான்  இந்திய ராணுவம் படைகளை குவிக்கத் தொடங்கியுள்ளது.

Advertisement
இந்தியா

லடாக்கில் இந்தியா - சீன ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

New Delhi:

லடாக்  பிராந்தியத்தில் ஏற்பட்ட இந்தியா - சீனா மோதல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். 

கிழக்கு லடாக் எல்லைக்கோட்டு பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் இந்திய மற்றும் சீன  ராணுவ படைகள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள டார்புக்-ஷாயோக்-தவுலாத் பேக் ஓல்டி சாலை உட்பட பல முக்கிய புள்ளிகளைச் சுற்றி சீன படைகள் முகாமிட்டுள்ளனர். இந்த சம்பவம் புதிய பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, 100 கூடாரங்களை சீன ராணுவம் அமைத்து வருவதாகவும், பதுங்குக் குழிகள் அமைக்கும் நோக்குடன் கன ரக இயந்திரங்களை கொண்டு வந்துள்ளன. இதற்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான்  இந்திய ராணுவம் படைகளை குவிக்கத் தொடங்கியுள்ளது.

இந்திய ராணுவத்தினர் சுமார் 5 ஆயிரம்பேர் லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

இதனால் லடாக்கில்  பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். 

Advertisement