அர்ஜெண்டினாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய இளவரசரான முகமது பின் சல்மானை சந்தித்து பேசினர். (Reuters)
New Delhi/Cairo: பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய இளவரசரான முகமது பின் சல்மானை சந்தித்தார். அர்ஜெண்டினாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் இருவரும் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பின் போது பொருளாதார, கலாச்சார மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், இருநாடுகளுக்குமிடையேயான தொழில்நுட்ப , புதுப்பிக்கதக்க சக்தி மற்றும் உணவு பாதுகாப்பு குறித்தும் பேசப்பட்டுள்ளது.
''முகமது பின் சல்மானுடனான சந்திப்பு மகிழ்ச்சியானதாக அமைந்தது. இந்திய - சவுதி அரேபிய உறவுகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்து பேசினோம்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் ''இருநாடுகளுக்கிடையேயான தொழில்நுட்ப, உள்கட்டமைப்பு, பெட்ரோலியம், உணவு பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிதி மற்றும் பாதுகாப்பு துறைகளில் முதலீடுகள் குறித்து பேசப்பட்டது '' என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் பிரதமர் மோடி ஐநா செயலாளர் ஆன்டோனியோ கட்டர்ஸை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பில் போலந்தில் நடக்கும் COP24 சந்திப்புக்கான அழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
13வது ஜி20 சந்திப்பின் நடுவே மோடி-ட்ரம்ப்- அபே சந்திப்பு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் சக்திவாய்ந்த நாடுகளான இந்தியா-அமெரிக்கா- சீனா நாட்டு தலைவர்கள் சந்திப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் மற்றும் அபே சந்திப்புக்கு பிறகு இவர்கள் மூவரும் சந்திக்கும் நிகழ்வு குறித்த தகவல் வெளியாகும் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)