Mangal Kewat had earlier expressed happiness after receiving a congratulatory letter by PM.
Varanasi (Uttar Pradesh): சந்திப்பின் போது ரிக்சா தொழிலாளி மங்கள் கெய்வத்; மற்றும் அவரின் குடும்ப நலனை விசாரித்து, தூய்மை இந்தியா திட்டத்திற்கு நிதி அளித்ததற்காகப் பிரதமர் பரஸ்பர அன்பைப் பகிர்ந்துகொண்டார்.
வாரணாசியைச் சேர்ந்த மங்கள் கெய்வத் ரிக்சா தொழிலாளி ஆவார். இவர் பிரதமர் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக தன்னுடைய சொந்த செலவில் முடிந்த அளவில் கங்கையைத் தூய்மைப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஒரு நாள் பயணமாக தன்னுடைய நாடாளுமன்றத் தொகுதிக்கு பிப்.16 அன்று வந்த பிரதமர், ரிக்சா தொழிலாளி மங்கள் கெய்வத் நலத்தையும், அவரின் குடும்ப நலனையும் விசாரித்தார்.
முன்னதாக, ஏ.என்.ஐ செய்தி நிருபர்களிடம் மங்கள் கெய்வத் “என் மகளின் முதல் திருமண அழைப்பிதழைப் பிரதமர் அலுவலகத்திற்குக் கடந்த 8-ம் தேதி அனுப்பியிருந்தேன். எனக்குப் பிரதமரிடமிருந்து வாழ்த்து கடிதம் பதிலாளாக வந்திருந்தது. இது எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.” என தெரிவித்திருந்தார்.
மேலும் பிரதமரின் ஒரு நாள் பயணத்தில் மங்கள் கெய்வத் மற்றும் அவருடைய மனைவி ரேணு தேவியும் பிரதமரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.