This Article is From Aug 16, 2018

“தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு” வாஜ்பாய் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை அடுத்து ட்விட்டரில் தனது வருத்தங்களை தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

New Delhi:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை அடுத்து ட்விட்டரில் தனது வருத்தங்களை தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

“ வாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பல தசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுடன் இருக்கிறது. ஓம் ஷாந்தி” என்றார்.

“வலுவான, வளமான இந்தியா 21-ம் நூற்றாண்டில் உருவாக காரணமாக இருந்தது அவரது தன்னிகரற்ற தலைமை. அவரது தொலை நோக்கு பார்வை கொண்ட பல திட்டங்கள், அனைத்து இந்தியர்களையும் சென்று சேர்ந்தது” என்றும் கூறினார்.

மேலும் “வாஜ்பாயின் மரணம், எனக்கு தனிப்பட்ட, ஈடு செய்யமுடியாது இழப்பு. அவருடன் பல பொன்னான நினைவுகள் எனக்கு இருக்கின்றன. என் போன்ற காரியகர்த்தாக்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி. அவருடைய அறிவுக் கூர்மையையும், நகைச்சுவைத் தன்மையையும் என்றும் மறக்கமாட்டேன்” என்றார்.

“அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் முயற்சியாலும் போராட்டத்தாலும், ஒவ்வொரு செங்கல்லாக பா.ஜ.கவை கட்டமைத்தார். இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து பா.ஜ.கவின் கொள்கையை பரப்பினார். அதனால் தான் இன்று பா.ஜ.க இந்திய அரசியலிலும், பல மாநிலங்களிலும் பலமான படையாக இருக்கிறது" என்றார்.

.