This Article is From May 29, 2019

8 ஆயிரம் விருந்தினர்களுடன் பிரமாண்டமாக நடைபெறுகிறது மோடியின் பதவியேற்பு விழா!!

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பதவியேற்பு விழாவைப் போன்று இந்தாண்டும் பிரமாண்டமாக பதவியேற்பு விழா நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 ஆயிரம் விருந்தினர்களுடன்  பிரமாண்டமாக நடைபெறுகிறது மோடியின் பதவியேற்பு விழா!!

வெளிநாட்டு தலைவர்கள் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

New Delhi:

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுடன் நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த விழா வெகு விமர்சையாக நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடியின் பதவியேற்பு விழா மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.  உலக நாடுகளின் தலைவர்களை தவிர்த்து மாநில  முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100-க்கும் அதிகமானோருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா குறித்து குடியரசு தலைவருக்கான செயலர் அசோக் மாலிக் கூறுகையில், 'குடியரசு தலைவர் மாளிகையில்  நடைபெற்ற விழாக்களில் இந்த விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறும்' என்று தெரிவித்தார். 

2014-ல் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற்றபோது அதில் 5 ஆயிரம் விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.  தற்போது இந்த எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

.