This Article is From Dec 22, 2019

என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள், பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம்: மோடி

இந்த நாட்டு மன்னின் முஸ்லிம்களை இந்த குடியுரிமை திருத்தச்சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒன்றும் செய்ய முடியாது.

ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

New Delhi:

என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள், ஆனால் ஒருபோதும் பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம் என டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

இந்தியாவில் எந்த தடுப்புகாவல் மையங்களும் இல்லை என்றும் எந்த முஸ்லிம்களும் நாட்டில் தடுப்பு காவலில் வைக்கப்படவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறனாக தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று அவர் குற்றம்சாட்டினார். 

முஸ்லிம்கள் தடுப்பு காவலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் சில நக்சல்கள் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். உங்கள் கல்விக்காது மதிப்பளியுங்கள்.. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருமுறை வாசித்து பாருங்கள் என்று அவர் கூறினார். 

அடுத்த வருடம் டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி வைக்கும் வகையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். 

இந்த நாட்டு மன்னின் முஸ்லிம்களை இந்த குடியுரிமை திருத்தச்சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒன்றும் செய்ய முடியாது. நாட்டில் உள்ள முஸ்லிம்களை யாரேனும் தடுப்பு காவலுக்கு அனுப்பினார்களா? அல்லது இந்தியாவில் முஸ்லிம்களுக்கு தடுப்பு காவல் எதுவும் உள்ளதா? இது நாட்டை இரண்டாக்க கூறப்படும் பொய் என்று அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை படிக்க வேண்டும் என்றும் வதந்திகளை நம்பக்கூடாது என்றும் அவர் கூறினார். இந்த குடியுரிமை திருத்தச் சட்டமானது யாரது 'குடியுரிமையையும் பறிக்காது', நீண்ட காலமாக இந்தியாவில் வாழும் மக்களுக்கு இது பயனளிக்கும். ஆனால், புதிதாக வந்த அகதிகளுக்கு இது பயனளிக்காது என்று பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார். 

மேலும், மதத்தால் துன்புறுத்தலுக்கு உள்ளான வங்கதேச மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் கூறியதை பிரதமர் மோடி சுட்டி காட்டினார்.

.