This Article is From Oct 16, 2019

''பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை அரியானாவுக்கு திருப்பி விடுவோம்'' - மோடி பேச்சு!!

அரியானா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் இம்மாதம் 21-ம்தேதி நடைபெறவுள்ளது. முடிவுகள் அக்டோபர் 24-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன.

''பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை அரியானாவுக்கு திருப்பி விடுவோம்'' - மோடி பேச்சு!!

அரியானா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி

Charkhi Dadri, Haryana:

பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தை அதனை மத்திய அரசு அரியானாவுக்கு திருப்பி விடும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 

அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் 21-ம்தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைக்கே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதையொட்டி காங்கிரசும், பாஜகவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், சர்க்கி தாத்ரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது-

கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு நாம் தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த தண்ணீர் அரியானா விவசாயிகளுக்கும், இந்தியாவுக்கம் சொந்தமானது. இனிமேல் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கப்போவதில்லை. அவற்றை நிறுத்தும் பணிகள் தொடங்கி விட்டன. இனி பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் அரியானாவுக்கு திருப்பி விடப்படும். 

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வதந்திகளை பரப்பி வருகிறது. ஒட்டுமொத்த நாடே சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை கொண்டாடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தவறான தகவல்களை கூறி வருகின்றனர். 

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஜம்மு காஷ்மீர் முழுவதுமாக இணைந்து விடுகிறது. அரியானாவில் பாஜகவை மக்கள் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். இதன் மூலம் டெல்லி மத்திய அரசு, மாநில மனோகர் லால் கட்டார் அரசு என இரட்டை எஞ்சின்களுடன் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செல்லும்.
இவ்வாறு மோடி பேசினார். 
 

.