நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்திக்க வரும் மோடி
ஹைலைட்ஸ்
- PM says many issues of public importance to be in the Winter Session
- A united opposition will be set to pile up pressure on the government
- Urjit Patels exit, Ram temple and Rafale deal likely to be discussed
New Delhi: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், கட்சிக்காக உழைக்காமல் எம்பிக்கள் மக்களுக்காக உழைப்பார்கள் என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதில் அயோத்தி ராமர் கோயில் பிரச்னை, ரிசர்வ் வங்கி கவர்னரின் ராஜினாமா, ரபேல் விவகாரம், பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''மக்கள் பிரச்னை குறித்த பல்வேறு அம்சங்கள் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் பேசப்பட உள்ளது. எம்பிக்கள் மக்கள் நலன் சார்ந்த விவாதங்களில் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன். கட்சிக்காக இல்லாமல் மக்களுக்காக எம்.பி.க்கள் வேலைபார்ப்பார்கள் என கருதுகிறேன்.'' என்று கூறியுள்ளார்.
குளிர்கால கூட்டத்தொடரில் கடும் அமளியை கிளப்புவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி உள்ளன. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மோடி கூறியிருந்தார். இதேபோன்று எதிர்க்கட்சிகளும் தனியாக கூட்டம் நடத்தின. இதில் உத்தரப்பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆகியவை மற்றும் பங்கேற்கவில்லை.