கடந்த மாதம் 26ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற 73வது ஐ.நா பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த விருது குறித்த தகவலினை ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் வெளியிட்டார். அந்தக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்றிருந்தார்.
2022-ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவருவதாக பிரதமர் மோடி அளித்துள்ள வாக்குறுதி மற்றும் சுற்றுச்சூழலை காக்க அவர் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டி புவியின் பாதுகாவலர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட ஐ.நா பொதுச்செயலாளர் இந்த விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து, புவி பாதுகாவலர் என்ற விருதினை பிரெஞ்ச் அதிபருடன் பிரதமர் மோடி பகிர்ந்து கொள்கிறார். விருதை பெற்ற பிறகு பேசிய பிரதமர் மோடி, இந்தியர்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதி பூண்டு இருப்பதாகவும், இது இந்தியர்கள் அனைவருக்குமான கவுரவம் என்று அவர் தெரிவித்தார்.