This Article is From May 23, 2019

தேர்தல் வெற்றி: ட்விட்டரில் தனது பெயருக்கு முன்னால் இருந்த ’சவுக்கிதாரை’ நீக்கிய மோடி!

இதேபோல், ஊழலுக்கு எதிராக போராடும் அனைவரும் நாட்டின் பாதுகாவலர்களே என்று கூறிய அவர், தொடர்ந்து ட்விட்டரில் தனது பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார்.

Advertisement
இந்தியா Written by (with inputs from NDTV)

Chowkidar Narendra Modi: சவுக்கிதாரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நேரம் வந்துள்ளது. சவுக்கிதாரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நேரம் வந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றியை தொடர்ந்து, ட்விட்டரில் தனது பெயருக்கு முன்னால் இருந்த சவுக்கிதாரை பிரதமர் மோடி நீக்கியுள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தொடக்கம் முதலே பாஜக பெரும் முன்னிலையில் இருந்து வந்தது. தொடர்து 340க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிப்பதன் மூலம் கடந்த 2014ல் பாஜக பெற்ற வெற்றியை காட்டிலும் இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற உள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ 100 தொகுதிகளை பெறவே கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. தொடர்ந்து 90 தொகுதிகளில் அதுவும் குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்திலே முன்னிலை வகித்து வருகிறது. இதேபோல், ராகுலின் சொந்த தொகுதியான அமேதியிலும் அவர் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். 

இந்நிலையில், ட்விட்டரில் தனது பெயருக்கு முன்னால் இருந்த சவுக்கிதாரை பிரதமர் நரேந்திர மோடி நீக்கியுள்ளார். தொடர்ந்து, அதுகுறித்து தனது ட்விட்டரில் அவர் கூறியதாவது, சவுக்கிதாரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நேரம் வந்துள்ளது. சவுக்கிதார் என்ற வார்த்தை ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டதே தவிர, தொடர்ந்து மக்களின் பாதுகாவலனாகவும், நாட்டை காக்கும் முனைப்புடன் செயல்படுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், சவுக்கிதரை மற்ற பாஜக பிரமுகர்களும் நீக்கும் படி கேட்டுக்கொண்டார். 

Advertisement

முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் விவகாரத்தில் மோடியை திருடன் என்று தீவிரமாக விமர்சித்து வந்தார். இதைத்தொடர்ந்து, ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் மோடி தன்னை சவுக்கிதார் (காவலன்) என்று கூறிக்கொண்டார். 

இதேபோல், ஊழலுக்கு எதிராக போராடும் அனைவரும் நாட்டின் பாதுகாவலர்களே என்று கூறிய அவர், தொடர்ந்து ட்விட்டரில் தனது பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து, பாஜக தலைவர்கள், பிரமுகர்கள் என அனைவரும் ட்விட்டரில் தங்களது பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என்று சேர்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement