This Article is From Apr 19, 2020

இனம், மதம், சாதி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு கொரோனா வைரஸ் தாக்காது: பிரதமர் மோடி

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 16,000ஐ கடந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தற்போது தெரிவித்திருக்கிறது.

இனம், மதம், சாதி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு கொரோனா வைரஸ் தாக்காது: பிரதமர் மோடி

இன்று நாங்கள் ஒன்றாக ஒரு பொதுவான சவாலை எதிர்கொள்கிறோம்: பிரதமர் மோடி

New Delhi:

கொரோனா தொற்று என்பது யாரையும் இனம், மதம், நிறம், சாதி, மொழி அல்லது எல்லையைக் பார்த்து தாக்குவதில்லை. எனவே நாம் ஒற்றுமையுடனும், சகோதரத்துடனும் இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தற்போது தனது பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். வரலாற்றில் முந்தைய தருணங்கள் போல் அல்லாது, நாம் தற்போது ஒரு பொதுவான சவாலை எதிர்கொண்டிருக்கிறோம். இனி வரும் காலத்தில் ஒற்றுமை என்பது அவசியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 16,000ஐ கடந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தற்போது தெரிவித்திருக்கிறது.

இந்தியாவிலிருந்து வெளிப்படும் சிந்தனைகள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.  உடல் மற்றும் அறிவு ஆகியவற்றின் சரியான கலவையுடன் இந்தியா, கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலகட்டங்களில் உலகின் சிக்கலான நவீன பன்னாட்டு விநியோக சங்கிலிகளின், உலகளாவிய நரம்பு மையமாக வளர  முடியும். தற்போது சந்தர்ப்பத்திற்கு இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்திக்கொள்வோம்.  எனவே அதற்கு நாட்டு மக்கள் அனைவரும் பங்களிப்பு செய்யுங்கள் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஸ்கிரீனுக்கு பிறகே இஸ்லாமிய நோயாளிகள் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தது. தற்போது இந்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உ.பி அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீது ஊடகங்கள் அவதூறு பரப்புவதாக இஸ்லாமிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தினை நாடியுள்ளன. தற்போது தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 519 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 1324 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டிருப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நாடு முழுவதும் 16,365 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மே 3 வரை முழு முடக்க நடவடிக்கை அமலில் இருக்கும் நிலையில் ஏப்ரல் 20க்கு பிறகு தளர்வுகளை அனுமதிக்கலாம் என மத்திய அரசு முன்னதாக குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இல்லத்தில் மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தினை நடத்தினார். அதில் ஏப்ரல் 20க்கு பிறகான தளர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

.