நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பிக்கிறது. இந்த கூட்டத் தொடரின்போது மத்திய அரசு, பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்.
17வது லோக்சபாவின் முதல் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே பத்திரிகையளர்களிடம் பேசினார். அப்போது அவர், "எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு வார்த்தையும் கருத்தும் முக்கியமானவை" என்று பேசினார்.
அவர் தொடர்ந்து, “எதிர்க்கட்சிகள், தங்களிடம் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்கள் தீர்க்கமாக தொடர்ந்து பேச வேண்டும். அப்படி அவர்கள் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்” என்று பேசினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தன. இதனால், தேர்தலுக்குப் பின்னர் அவர்கள் ஒன்றுகூடவில்லை. பொதுவாக நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் முன்னர், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எப்படி செயலாற்ற வேண்டும் என்பது குறித்து விவாதிக்கும். ஆனால் இந்த முறை அப்படியொரு சந்திப்பே நடக்கவில்லை.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பிக்கிறது. இந்த கூட்டத் தொடரின்போது மத்திய அரசு, பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்.