Read in English
This Article is From Jul 17, 2020

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக சிறந்த மீட்பு விகிதத்தினை நாடு கண்டுள்ளது: பிரதமர்!

ஐக்கிய நாடுகள் சபையின் ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் அமர்வின் இந்த ஆண்டுக்கான உயர்மட்ட கூட்டத்தில் சற்று முன்னர் மோடி உரையாற்றினார்

Advertisement
இந்தியா Edited by

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான எங்களது போராட்டதின் காரணமாக மிகச் சிறந்த மீட்பு விகிதத்தினை அடைந்துள்ளோம் என பிரதம் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் அமர்வின் இந்த ஆண்டுக்கான உயர்மட்ட கூட்டத்தில் உரையாற்றியபோது கூறியுள்ளார். மேலும்...

  • ஐ.நா.வின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் அதே வேளையில், உலகளாவிய பலதரப்பு முறையை சீர்திருத்துவதாக உறுதியளிப்போம்.
  • சமகால உலகின் யதார்த்தத்தை பிரதிநிதித்துவப்படுத்த பன்முகத்தன்மை தேவை.
  • நிலையான அமைதி மற்றும் செழிப்பை அடைவதற்கான பாதை என்பது பன்முகத்தன்மை மூலமே பெற முடியும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது.
  • இந்தியாவில், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சித்தோம்.
  • COVID க்கு எதிரான எங்கள் கூட்டுப் போராட்டத்தில், 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாங்கள் உதவி வழங்கியுள்ளோம்.

என மோடி கூறியுள்ளார். 

Advertisement