டிசம்பர் 3-ம்தேதி ஐதராபாத்தில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்வார்.
Hyderabad: ''தெலங்கானாவில் வெற்றி பெறுவதற்கு ஆசிர்வதிக்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
டிசம்பர் 7-ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் ர்தல் நடைபெறவுள்ளது. இங்கு ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கென கூட்டணி அமைத்துள்ளன.
ஆனால் கூட்டணி ஏதும் இன்றி பாஜக மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 3-ம் தேதி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். அன்றைய தினம் ஐதராபாத்தில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட உள்ளது. இதில் மோடி பங்கேற்கிறார்.
இந்த நிலையில், ட்விட்டர் மூலமாக பிரதமர் மோடி தெலங்கானா மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தெலுங்கு மொழியில் அவர் கூறியிருப்பதாவது-
தெலங்கானாவில் வசிக்கும் எனது சகோதர சகோதரிகளே. உங்களை நான் சந்திப்பதில் ஆர்வமாக உள்ளேன். நிஜாமாபாத், மகபூப் நகர் ஆகிய இடங்களில் நான் பேசுகிறேன். பாஜக வெற்றி பெறுவதற்கு உங்களின் ஆதரவும், ஆசிர்வாதமும் தேவை.
இவ்வாறு மோடி கூறியுள்ளார். வரும் ஞாயிறன்று பாஜக தலைவர் அமித் ஷா தெலங்கானாவில் பிரசாரம் மேற்கொள்கிறார்.