நீரின்றி அமையாது உலகு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றினார்.
நாட்டின் 73 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் காலை 7.30 மணியளவில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார்.
உரையின் போது நம் நாட்டில் நீர் சேமிப்பின் முக்கியத்துவம் மிகவும் அவசியமானது. அதை நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். அதற்காகத்தான் நாங்கள் ஜல்சக்தி என்ற புதிய அமைச்சகத்தை அமைத்துள்ளோம். 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு நாட்டு மக்களின் மனதில் மிகப்பெரிய வருத்தம் தெரிந்தது. அதாவது இந்தியா எப்போது மாறும் என்ற சிந்தனை நாட்டு மக்களிடம் இருந்தது. தற்போது நாட்டு மக்களின் மனநிலை மிகவும் மாறியுள்ளது. தற்போது மக்கள் அனைவரும் தங்களின் கனவுகளை நோக்கி ஓட தொடங்கி விட்டனர். மக்கள் அனைவரும் நிச்சயம் இந்தியா நல்ல நிலைமைக்கு வரும் என்ற நம்பிக்கை வந்துவிட்டனர்.
மேலும் ‘நீரின்றி அமையாது உலகு' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி தண்ணீரின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தினார். அத்துடன் ஜல் ஜீவன் திட்டம் இன்னும் வேகமாக செயல்படும் எனத்தெரிவித்துள்ளார்.