“ஒற்றுமைக்கான சிலையின் மேன்மையைப் பாருங்கள். சர்தார் படேலுக்கு இந்தியாவின் அஞ்சலி” என்று வீடியோவுடன் மோடி பதிவு ஒன்றையும் இட்டுள்ளார்.
ஹைலைட்ஸ்
- தனது பிறந்தநாளையொட்டி குஜராத்திற்கு சென்றுள்ளார் மோடி
- உலகின் மிகப் பெரிய 'ஒற்றுமைக்கான சிலையைப்' பார்வையிட்டார் மோடி
- ஒற்றுமைக்கான சிலை குறித்தான வீடியோவையும் பகிர்ந்துள்ளார் மோடி
Kevadia, Gujarat: பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி, தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றுள்ளார் மோடி. அங்கு அவர் நர்மதா நதியில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேலின் ‘ஒற்றுமைக்கான சிலையைப்' பார்வையிட்டார். உலகின் மிகப் பெரிய சிலை என்று சொல்லப்படும் அதை, வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளார் மோடி.
“ஒற்றுமைக்கான சிலையின் மேன்மையைப் பாருங்கள். சர்தார் படேலுக்கு இந்தியாவின் அஞ்சலி” என்று வீடியோவுடன் மோடி பதிவு ஒன்றையும் இட்டுள்ளார். பிரதமர் மோடி, படேலின் 100வது பிறந்தநாளையொட்டி, சென்ற ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி ஒற்றுமைக்கான சிலையைத் திறந்து வைத்தார்.
மோடி, தொடர்ந்து பல ட்வீட்டுகள் மூலம் காக்டஸ் பூங்கா மற்றும் வன சஃபாரி குறித்தான படங்களைப் பகிர்ந்தார்.
நேற்று இரவு குஜராத்திற்கு சென்றார் பிரதமர் மோடி. காந்திநகரிலிருந்து அவர் நர்மதா மாவட்டத்தில் இருக்கும் கெவாடியாவுக்கு இன்று காலை சென்றார். பல திட்டங்களை அவர் மேற்பார்வையிட்டார். மேலும் அவர் ஒற்றுமைக்கான சிலை மற்றும் சர்தார் சரோவர் அணையைப் பார்வையிட்டார்.
2017 ஆம் ஆண்டு, நர்மதா அணையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அந்த அணை தற்போது அதன் முழு கொள்ளளவான 138.68 அடியை எட்டியுள்ளது. இந்த அணையின் மூலம் 131 நகர மையங்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்றும், 9,633 கிராமங்களுக்குப் பாசனத்துக்கு நீர் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் 15 மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் இதன் மூலம் பயனடைய உள்ளதாம்.
கடந்த ஆண்டு, தனது வாரணாசி தொகுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகளோடு பிறந்தநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி.