ஷேக் முஜிபுர் 100-வது பிறந்தநாள் விழா: காணொலி காட்சி மூலம் மோடி பங்கேற்பு
New Delhi: வங்கதேச முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் 100-வது பிறந்தநாள் விழா: காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர்மோடி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, வங்கதேசத்தில் மார்ச் 17 அன்று திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் எந்தவொரு பொதுக்கூட்டமும் இல்லாமல் நடைபெறும். முன்னதாக, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100 வது பிறந்தநாளில் பங்கேற்க பிரதமர் மோடி வங்கதேசம் செல்வதாக இருந்தது.
வங்கதேசத்தின் முதல் ஜனாதிபதியான ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1920 மார்ச் 17 அன்று ஃபரித்பூர் மாவட்டத்தில் பிறந்தார். அவர் '' ஜாதீர் பிடா '' என்றும் குறிப்பிடப்படப்படுகிறார்.
தனது பயணத்தின் போது, பிரதமர் மோடி தனது வங்கதேச பிரதிநிதி ஷேக் ஹசீனாவுடன் பலதரப்பட்ட தலைப்புகளில் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.