This Article is From Dec 27, 2018

2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாராம்! - ஜன.6ல் பிரதமர் மோடி கேரளா பயணம்

சபரிமலை அமைந்துள்ள பத்தினம்திட்டா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் இது ஒரு திறமையான அரசியல் நடவடிக்கையாக கருதப்படுகிறது

2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாராம்! - ஜன.6ல் பிரதமர் மோடி கேரளா பயணம்

மக்களவை தேர்தலில் கேரள மாநிலத்தில் நல்ல முடிவுகளை பெறுவோம் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது.

Thiruvananthapuram:

மக்களவே தேர்தலுக்கான பிரசாரத்திற்காக ஜன.6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதி வர உள்ளார்.

சபரிமலை அமைந்துள்ள பத்தினம்திட்டா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் இது ஒரு திறமையான அரசியல் நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள மாநில பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரண்பிள்ளை, ஆந்திராவில் இருந்து பத்தினம்திட்டா பகுதிக்கு பிரதமர் வர உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பத்தினம்திட்டா வரும் அவர், அங்கிருந்து குண்டூர் செல்கிறார்.

140 உறுப்பினர்களை கொண்ட கேரள சட்டமன்றத்தில், பாஜகவிற்கு 1 உறுப்பினர் மட்டுமே உள்ளார். இதனால், இந்த 2019 தேர்தலில் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக கேரளாவில் நல்ல முடிவுகளை பெற்றது. கேரளாவில் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் தரிசனம் செய்யலாம் என கடந்த செப்.28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, அங்கு போராட்டம் நடந்து வருகிறது.

.