Read in English
This Article is From Jul 23, 2018

ருவாண்டன் கிராம மக்களுக்கு 200 மாடுகளை பரிசாக அளித்தார் பிரதமர் மோடி

ஆப்ரிக்கா நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ருவாண்டன் அதிபருக்கு 200 மாடுகளை பரிசாக அளித்துள்ளார்

Advertisement
இந்தியா Posted by (with inputs from IANS)
New Delhi:

புதுடில்லி: ஆப்ரிக்கா நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ருவாண்டன் அதிபருக்கு 200 மாடுகளை பரிசாக அளித்துள்ளார்.

ஐந்து நாள் அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆப்ரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக ருவாண்டனிற்கு பிரதமர் சென்றுள்ளார். ருவாண்டன் அரசின் ‘கிரின்கா’ என்ற திட்டத்தின் மூலம், ஏழை மக்களுக்கு மாடுகள் அளிக்கப்படுகிறது. எனவே, ருவாண்டன் அரசுக்கு 200 மாடுகளை பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளார். மேலும், இந்த பயணத்தின் மூலம் இந்திய-ஆப்ரிக்க நாடுகளிடையே உறவு பலப்படும் என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

கடந்த நான்கு ஆண்டுகளில், இந்திய பிரதமர், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோர் 23 முறை ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

ருவாண்டன் நாட்டில் இருந்து, பிரதமர் மோடி நாளை உகாண்டா செல்கிறார். பின்னர், அங்கிருந்து தென் ஆப்ரிக்கா செல்கிறார். 10-வது பிரிக்ஸ் தலைவர்கள் மாநாட்டை தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் நாடுகளின் அமைதி, வளர்ச்சி, சுகாதாரம் குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

Advertisement