இந்த திட்டம் கடினாமாக உழைக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் என பிரதமர் டிவிட்
ஹைலைட்ஸ்
- பிரதான் கிசான் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.
- 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகள் பலன் பெறுவர்
- 3 தவணைகளாக ரூ.6000 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
New Delhi: ரூ.75,000 கோடி செலவில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார்.
2019 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ரூ.75,000 கோடி செலவில் 12 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில், நிகழாண்டில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,000 விதம், 3 தவணைகளாக ரூ.6,000 வரவு வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இன்று வரலாற்றில் முக்கியமான நாள். பிரதான் மந்திரி கிசான் திட்டம் கோராக்பூரில் துவங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டம் கடினாமாக உழைத்து, இந்தியாவுக்கு உணவளிக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிப்.1ஆம் தேதி திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலே இது நடைமுறைக்கு வந்தது. இதுவே புதிய இந்தியாவின், புதிய கலாச்சாரம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இவ்வளவு விரைவாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மக்களவே தேர்தலே காரணம் என்றும் எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.3.3 அளிக்கிறார் என்றும் ராகுல்காந்தி கடுமையாக சாடினார்.
உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் இன்று நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, பிரதமர் மோடி அந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார். அப்போது, ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.2,000 வரவு வைக்கப்படவுள்ளது.