This Article is From Jan 19, 2019

''கட்சி எம்.எல்.ஏ.க்களை கண்ட்ரோல் செய்ய முயல்கிறார் மோடி''- காங்கிரஸ் குற்றச்சாட்டு

மோடி என்னதான் முயற்சி செய்தாலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அச்சுறுத்தி அடி பணிய வைக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

''கட்சி எம்.எல்.ஏ.க்களை கண்ட்ரோல் செய்ய முயல்கிறார் மோடி''- காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய அரசு நிறுவனங்களை மோடி தவறாக பயன்படுத்துகிறார் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

New Delhi:

கட்சி எம்எல்ஏக்களை சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டுகள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயல்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது-

அமலாக்கத்துறை சோதனை, வருமான வரித்துறை, சிபிஐ ரெய்டு உள்ளிட்டவற்றின் மூலம் எங்கள் கட்சி எம்எல்ஏக்களை மோடி அச்சுறுத்திப் பார்க்கிறார். இவ்வாறாக எங்களது எம்எல்ஏக்களை கட்டுப்படுத்த மோடி முயல்கிறார்.

அவரது முயற்சி பலன் அளிக்காது. என்னதான்  எங்கள் எம்எல்ஏக்கள் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மன வலிமையும், உறுதியும் உடையவர்கள். யாரும் அவர்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது.

மோடியின் கண்ட்ரோல் முயற்சிக்கு கர்நாடகாவில் நடந்து வரும் ஆபரேஷன் லோட்டஸ் ஓர் உதாரணம். இங்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மோடி முயற்சி செய்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார். கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி. வேணு கோபால் பேசுகையில், ''காங்கிரஸ் தொண்டர்கள் கடினமாக உழைத்தால் 2019-ம் ஆண்டு காங்கிரஸுடைய ஆண்டாகத்தான் இருக்கும். நிச்சயமாக மோடியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம். கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் - மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி வெற்றி பெறும்'' என்றார்.

.