This Article is From Dec 11, 2018

உர்ஜித் படேலின் ராஜினாமா ரிசர்வ் வங்கிக்கு பேரிழப்பு - பிரதமர் மோடி கருத்து

உர்ஜித் படேலின் தலைமையின் கீழ் ரிசர்வ் வங்கியின் நிதி நிலைமை சீராக இருந்தது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உர்ஜித் படேலின் ராஜினாமா ரிசர்வ் வங்கிக்கு பேரிழப்பு - பிரதமர் மோடி கருத்து

உர்ஜித் படேல் கவர்னராக இருக்கும்போதுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி மேற்கொண்டிருந்தார்.

New Delhi:

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை உர்ஜித் படேல் ராஜினாமா செய்திருக்கும் நிலையில், அவரது ராஜினாமா ரிசர்வ் வங்கிக்கு பேரிழப்பு என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''மிக நேர்த்தியுடனும், நாட்டுப் பற்றுடனும் உர்ஜித் படேல் பணியாற்றி வந்தார். துணை கவர்னர் மற்றும் கவர்னர் என ரிசர்வ் வங்கியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பணியாற்றியிருக்கிறார். புகழுடன் இருக்கும்போதே அவர் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு'' என்று கூறியுள்ளார்.

இதேபோன்று மற்றொரு ட்வீட் பதிவில், '' அதிக திறன் கொண்ட பொருளாதார வல்லுனராக உர்ஜித் படேல் இருந்தார். நாட்டின் பொருளாதாரம் குறித்த அவரது அறிவு மிகவும் பாராட்டத்தக்கது. அவரது தலைமையின் கீழ் ரிசர்வ் வங்கியின் நிதி நிலைமை சீராக இருந்தது'' என்று குறிபிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், '' ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராகவும், கவர்னராகவும் உர்ஜித் படேல் பொறுப்பு வகித்திருக்கிறார். அவரது கடமையை மத்திய அரசு பாராட்டுகிறது. அந்த பொறுப்புகளுக்கு தகுதி மிக்க நபராக உர்ஜித் படேல் இருந்தார்.'' என்று கூறியுள்ளார்.

.