Read in English
This Article is From Oct 21, 2019

பிரதமர் மோடி எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு : குவியும் பாராட்டுகள்

“உலகின் பழமையான மொழியில் என்னை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. இது ஒரு துடிப்பான கலாசாரத்தை வளர்த்துள்ளது. தமிழ் மொழி அழகாக இருக்கிறது. தமிழ் மக்கள் விதிவிலக்கானவர்கள்” என்று கூறினார்.

Advertisement
இந்தியா

மாமல்லபுரத்தில் இந்திய சீன முறைசாரா உச்சி மாநாடு நடைபெற்றது.

New Delhi:

.மாமல்லபுரத்தில் இந்திய சீன  முறைசாரா உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினார்கள். 12-ம் தேதி காலை கோவளம் கடற்கரையில் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அங்கிருந்த குப்பைகளையும் அகற்றி தூய்மையை வலியுறுத்தினார்.

அதன்பின் பிரதமர் மோடி இந்தி மொழியில் நீண்ட கவிதை ஒன்றினை தன் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கடற்கரையோர நடைபயிற்சிக்கு பின் எழுதிய அக்கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பினை நேற்று வெளியிட்டார்.

“சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரத்தின் அழகிய கடற்கரையில் இருந்தபோது நான் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கே” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இந்த கவிதைக்கு நகைச்சுவை நடிகர் விவேக் பாராட்டு தெரிவித்தார்.

”இயற்கையை வணங்குவது கடவுளுக்கு வணக்கம் செலுத்துவதற்கு சமம். ஏனென்றால் இயற்கைதான் சர்வவல்லமை வாய்ந்தது. மதிப்பிற்குறிய மோடி ஐயா பெருங்கடல் குறித்த கவிதைக்கு எங்கள் தேசத்தின் சார்பாக நன்றி” என்று நடிகர் விவேக் கூறியிருந்தார்.

Advertisement

இதற்கு மோடி பதிலளித்தார். “நன்றி விவேக்! இயற்கையின் மீதான மரியாதை நமது நெறிமுறைகளின் ஒரு முக்கிய பகுதியாகும். இயற்கை தெய்வீகத்தன்மையையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மாமல்லபுரத்தின் அழகிய கரையோரங்களும் காலை நேர அமைதியும் சில எண்ணங்களை வெளிப்படுத்த சரியான தருணங்களை அளித்தன. 
 

திரைப்பட நிறுவனமான போஃப்டாவை நிறுவிய தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்சயன் ட்வீட் செய்துள்ளார். “அன்புக்கும் மரியாதைக்கும் உரிய மோடி ஜி தமிழ் மொழிகாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அன்பையும் ஆதரவையும் தமிழ் மொழிக்கு கொடுக்கும் மோடிஜியை அனைவரும் கொண்டாட வேண்டும். நன்றி ஐயா” என்று தெரிவித்திருந்தார்.

Advertisement

இவருக்கு பதிலளித்த பிரதமர் மோடி “உலகின் பழமையான மொழியில் என்னை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. இது ஒரு துடிப்பான கலாசாரத்தை வளர்த்துள்ளது. தமிழ் மொழி அழகாக இருக்கிறது. தமிழ் மக்கள் விதிவிலக்கானவர்கள்” என்று கூறினார்.

Advertisement