বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 03, 2020

சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறுவதாகப் பிரதமர் மோடி போட்ட ட்வீட் - வெளிவந்த பின்னணி!

நேற்று பிரதமர் நரேந்திர மோடி, “வரும் ஞாயிற்றுக் கிழமை, எனது சமூக வலைத்தள கணக்குகளைத் துறக்கலாம் என்று நினைக்கிறேன். அது குறித்து மேலும் தகவலைத் தெரிவிப்பேன்,” என்றிருந்தார்.

Advertisement
இந்தியா Edited by

மோடியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள், #NoSir என்கிற ஹாஷ்-டேக்-ஐ டிரெண்ட் செய்து, சமூக வலைதளங்களிலிருந்து போக வேண்டாம் என்று அவரை வலியுறுத்தி வருகிறார்கள். 

Highlights

  • நேற்று, சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார் மோடி
  • அது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது
  • தற்போது அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்
New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று திடீரென்று, சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறலாம் என்று நினைக்கிறேன் எனத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதிர்ச்சிக் கொடுத்தார். அதன் பின்னணி என்னவென்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது. இன்று மோடி, “பெண்கள் தினமான மார்ச் 8 ஆம் தேதி, எந்தப் பெண்ணின் வாழ்க்கை, அவரின் பணி நமக்கு ஊக்கமளிக்கிறதோ, அவரிடம் என் சமூக வலைத்தள கணக்குகளைக் கொடுத்துவிடுவேன்,” என்றுள்ளார்.

அவர் மேலும், “இதன் மூலம் பல லட்சம் மக்களை அவர்கள் உற்சாகப்படுத்த முடியும். நீங்கள் அப்படிப்பட்ட பெண்ணா? அப்படிப்பட்ட பெண் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட கதைகளை #ஷிலீமீமிஸீsஜீவீக்ஷீமீsஹிs என்கிற ஹாஷ்-டேக்கிற்குக் கீழ் பகிரவும்,” என்று குறிப்பிட்டுள்ளார். 

நேற்று பிரதமர் நரேந்திர மோடி, “வரும் ஞாயிற்றுக் கிழமை, எனது சமூக வலைத்தள கணக்குகளைத் துறக்கலாம் என்று நினைக்கிறேன். அது குறித்து மேலும் தகவலைத் தெரிவிப்பேன்,” என்றிருந்தார். 

மோடியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள், #ழிஷீஷிவீக்ஷீ என்கிற ஹாஷ்-டேக்-ஐ டிரெண்ட் செய்து, சமூக வலைத்தளங்களிலிருந்து போக வேண்டாம் என்று அவரை வலியுறுத்தி வருகிறார்கள். 

Advertisement
Advertisement