ஈஸ்டர் தின குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின் மோடி செல்கிறார்.
New Delhi: இலங்கையில் ஈஸ்டர் அன்று தொடர் வெடி குண்டுகள் மக்கள் கூடும் தேவாலயங்களில் வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
அந்த சம்பவத்திற்குபின் முதலாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே.
இரண்டாவது முறையாக பதவியேற்று மோடி கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில் வழிபாட்ட முடித்து கொண்டு மாலத்தீவு சென்றார். இன்று அவர் இலங்கை சென்றுள்ளார். அங்கு இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்துள்ளனர்.
கொலும்பு விமான நிலையம் சென்றதும் பிரதமர் மோடி போட்ட ட்விட்டினை கீழே பார்க்கலாம்:
மதியம் 2 மணிக்கு நரேந்திர மோடி இலங்கை வாழ் இந்திய சமூக மக்களை பார்க்கவுள்ளார்.
3மணிக்கு இலங்கையை விட்டு கிளம்புகிறார்.
ஈஸ்டர் வெடிகுண்டு சம்பவத்திற்கு பின் வெளிநாட்டு தலைவராக இலங்கை செல்லும் முதல் நபர் பிரதமர் நரேந்திரமோடி ஆவார்.