Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 02, 2018

ரஃபேல் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி தாக்குபிடிக்க மாட்டார்: ராகுல் காந்தி

இது டசால்ட் நிறுவனத்தால் அனில் அம்பானிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முதல் கட்ட தாக்குதலாகும்

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

ரஃபேல் விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி தாக்குபிடிக்க மாட்டார், நான் உறுதியளிக்கிறேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ரஃபேல் ஜெட் தயாரிப்பாளர் டசால்ட் அனில் அம்பானியுடன் இணைந்து கடந்த வருடத்தில் 40 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்து எந்தவித லாபத்தையும் பெறவில்லை என்று தகவல்கள் வெளியானதை அடிப்படையாக கொண்டு ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மேலும் செய்தி நிறுவனமான ஒயரின் தகவலின் படி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் டசால்ட் முதலீடு செய்திருந்த ரூ.284 கோடி லாபமாக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்களுக்கு என்.டி.டீ.வி டசால்ட் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தை அணுகியதற்கு எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஒயரில் வெளிவந்திருக்கும் கட்டுரைக்கு இப்போது பதிலளிக்க முடியாது என்று என்.டி.டீ.விக்கு தெரிவித்துள்ளது.

Advertisement

காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஜெட் ஒப்பந்தத்தில் அரசாங்கம் அனில் அம்பானிக்கு சாதகமாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற ரஃபேல் விசாரணையின் போது, டசால்ட் நிறுவனம் இந்தியாவில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தை பங்குதாரராக தேர்ந்தெடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

மேலும், போர் விமான தயாரிப்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தை பங்குதாரராக சேர்க்க வேண்டுமென்று வலியுறுத்தப்படவில்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ளது. அனில் அம்பானி தலைமையிலான குழுமம் விண்கலன்களுக்கு தேவையான பொருட்களை தயாரித்து வருகின்றனர். ஆனால், இந்தியா கேட்டுக் கொண்ட 36 ஜெட்கள் தயாரிக்கப்படவில்லை.

Advertisement