This Article is From Oct 14, 2019

சீனா வருமாறு பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் அழைப்பு!!

சீன அதிபர் ஜி ஜிங்பிங் சென்னையில் 2 நாட்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். மாமல்லபுரத்தை 2 நாட்கள் சுற்றிப் பார்த்த அவர் இன்று தனது பயணத்தை முடித்துக் கொண்டார். இந்த முறைசாரா சந்திப்பை எதிர்காலத்தில் வரும் தலைவர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஜிங்பிங் கேட்டுக்கொண்டார்.

சீனா வருமாறு பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் அழைப்பு!!

பிரதமர் மோடியும் - ஜிங்பிங்கும் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக சந்தித்து பேசினர்.

New Delhi:

பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், எதிர்காலத்தில் வரும் தலைவர்கள் இதேபோன்ற சந்திப்பு முறைகளை நடத்த வேண்டும் என்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சீனா வருமாறு பிரதமர் மோடிக்கு ஜிங்பிங் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட மோடி விரைவில் சீனா வருவதாக உறுதி அளித்துள்ளார். 

2 நாட்கள் சற்றுப் பயணமாக சீன அதிபர் ஜிங்பிங் சென்னைக்கு வருகை தந்தார். நேற்று மாமல்லபுரத்தில் அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும், மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டனர். 

இரு தலைவர்களும் கடந்த 2 நாட்களாக 5 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். மோடி - ஜிங்பிங் சந்திப்பு தொடர்பாக வெளியறவு செயலர் விஜய் கோகலே இன்று விளக்கம் அளித்துள்ளார். 

இதன்படி, மோடியுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக ஜிங்பிங் குறிப்பிட்டிருக்கிறார். இதேபோன்ற சந்திப்புகளை பிற்காலத்தில் வரும் இந்தியா - சீன தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

சீனா வருமாறு பிரதமர் மோடிக்கு ஜிங்பிங் அழைப்பு விடுத்துள்ளார். இதனை பிரதமர் மோடி ஏற்றுள்ள நிலையில் அவரது சீன பயணம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இதேபோன்ற முறை சாரா சந்திப்பை மோடியும், ஜிங்பிங்கும் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தனாவில் கடந்த 2017 ஜூனில் நடத்தினர். 

கடந்த ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில் மோடியும், ஜிங்பிங்கும் சந்திப்பு நடத்தினர். இன்று சீன அதிபரை வழியனுப்பி வைத்த பிரதமர் மோடி, அவருக்கு தங்க ஜரிகை பட்டை பரிசாக அளித்தார். அதில் சீன அதிபரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. 

.