This Article is From Oct 12, 2019

தமிழகம் - சீனா இடையே வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவது குறித்து மோடி - ஜின்பிங் பேச்சு!!

’தீவிரமயமாக்கல் மற்றும் பயங்கரவாதத்தை’ பொதுவான சவால்களாக, எதிர்த்துப் போராட இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டன என அரசு நேற்று இரவு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியது.

தமிழகம் - சீனா இடையே வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவது குறித்து மோடி - ஜின்பிங் பேச்சு!!

PM Modi kicked off the informal summit with Chinese President Xi Jinping on Friday.

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பின்போது தமிழகம் - சீனாவின் பியூஜியான் மாகாணம் இடையே வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சி மாநாட்டை நடத்த துணை நின்ற தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இரண்டாவது கட்ட முறைசாரா சந்திப்பு இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இரு தலைவர்களும் நேற்றைய தினம் மகாபலிபுரத்தின் கோயில்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். பின்னர் கலாச்சார நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தவர்கள், தொடர்ந்து, தமிழக பாரம்பரிய இரவு உணவுகளையும் உட்கொண்டனர். 

தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் ஜின்பிங் ஆகியோரின் இன்றைய சந்திப்பு, தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் தங்கள் விரிவான பேச்சுவார்த்தையை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, தூதுவர்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. தொடர்ந்து, பிரதமர் மோடி ஜின்பிங்கிற்கு மதிய உணவை வழங்கினார். பின்னர் இந்த முறைசாரா சந்திப்பின் முடிவு குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டனர். 

முன்னதாக, நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தமிழக  பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, தோளில் துண்டு அணிந்து சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்றார். தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தபடி சந்தித்து பேசினர். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை, கண்டு பிரதமர்  மோடி கையசைத்து வியந்து ரசித்தார். அதனைபோன்று சீன அதிபரும் வியந்து கண்டு ரசித்தார்.

பிரதமர் மோடி - ஸி ஜின்பிங் 2வது நாள் சந்திப்பு குறித்த நேரடி தகவல்கள்: 
 

Oct 12, 2019 13:23 (IST)
கோவளத்தில் இருந்து நேராக விமான நிலையம் செல்கிறார் சீன அதிபர் ஜின்பிங்.
Oct 12, 2019 13:20 (IST)

சீன அதிபர் ஜின்பிங் பெயர் நெய்யப்பட்ட கைத்தறி பட்டு துணியை பரிசளித்த மோடி!


Oct 12, 2019 13:16 (IST)
Oct 12, 2019 12:24 (IST)

"உங்கள் விருந்தோம்பலில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். இதனை நானும் எனது சகாக்களும் நன்கு உணர்ந்தோம். இது எங்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்" என்று சீன அதிபர் ஜின்பிங் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐயிடம் தெரிவித்துள்ளார். 
Oct 12, 2019 12:22 (IST)

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தூதுவர்குழு அளவிலான பேச்சுவார்த்தையில், பிரதமர் மோடி, "நமது உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க சீனாவின் பார்வை உதவியுள்ளது என்று கூறினார். "இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்களைக் கொண்டிருந்தோம். சச்சரவுகளை உருவாக்க அனுமதிக்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Oct 12, 2019 10:35 (IST)

2வது நாள் சந்திப்பிற்காக கோவளம் வந்த சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி தாஜ் ஹோட்டலில் வரவேற்றார். 
Oct 12, 2019 10:33 (IST)
.