This Article is From Apr 04, 2020

மோடியின் ‘9 மணிக்கு 9 நிமிடம் விளக்கு ஏற்றுக’ அறிவிப்பு… மின்சார வாரியம் சொல்லும் பிரச்சினை!!

"ஏப்ரல் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டில் மின் விளக்குகளை அனைத்து டார்ச், விளக்குகள் அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்"

மோடியின் ‘9 மணிக்கு 9 நிமிடம் விளக்கு ஏற்றுக’ அறிவிப்பு… மின்சார வாரியம் சொல்லும் பிரச்சினை!!

"இதன் மூலம், நம்மில் யாரும் தனியாக இல்லை என்பதை உணர்த்துவோம். 130 கோடி இந்தியர்களின் பலத்தை உயர்த்துவோம்"

ஹைலைட்ஸ்

  • நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்
  • 130 கோடி மக்களும் இந்தப் போராட்டத்தில் ஒன்றாக உள்ளோம்: மோடி
  • ஒற்றுமையைக் காட்ட ஞாயிறு 9 மணிக்கு 9 நிமிடம் விளக்கு ஏற்றுக: மோடி

கொரோனா விவகாரம் தொடர்பாக இருமுறை நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்த நிலையில், நேற்று  நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். 

அதில் அவர், ‘மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி. 

மார்ச் 22-ம் தேதி கொரோனாவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு நீங்கள் நன்றி செலுத்திய விதம் மற்ற நாடுகளால் பின்பற்றப்படும் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது.

மேலும், ஏப்ரல் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டில் மின் விளக்குகளை அனைத்து டார்ச், விளக்குகள் அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். இதன் மூலம், நம்மில் யாரும் தனியாக இல்லை என்பதை உணர்த்துவோம். 130 கோடி இந்தியர்களின் பலத்தை உயர்த்துவோம்' என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து தமிழக மின்சார வாரியம், “தமிழகத்தில் நாளை இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள். அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்சினை ஏற்படும். எனவே மின் சாதனங்களை அணைக்க வேண்டாம்,” என்று கேட்டுக் கொண்டுள்ளது. 

.