This Article is From Sep 17, 2018

மோடி பர்த்டே: பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த பாஜக!

சென்னை மாநகராட்சிக்குக் கீழ் இயங்கும் மருத்துவமனைக்கு வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்

தங்க மோதிரங்களை பரிசளிக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை

Chennai:

பிரதமர் நரேந்திர மோடி, அவரது 68வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி பாஜக-வினர் பல்வேறு வகையில் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். தமிழக பாஜக, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்து மோடியின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குக் கீழ் இயங்கும் மருத்துவமனைக்கு இன்று வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக, ‘உலகின் மிக சக்தி வாய்ந்த மற்றும் புகழ் பெற்றத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகள், தங்களது தலைவரின் பிறந்த நாளின் போது தங்க மோதிரம் பரிசளிப்பது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளின் போதும், 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தது அதிமுக. ராயபுரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார், மோதிரங்களைப் பரிசளித்தார்.

இன்று வாரணாசிக்குச் சென்று 68வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார் பிரதமர் மோடி. வாரணாசியில் தரையிறங்கியதும் காசி விஸ்வநாத் கோயிலுக்குச் சென்று தரிசணம் செய்ய உள்ள மோடி, அதன் பிறகு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். பின்னர் பல வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் பிறந்த நாளுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘நாட்டை முன்னேற்றப் பாதையில் கட்டமைக்க மிகத் தீவிரமாக உழைக்கும் பிரதமர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

.