This Article is From May 12, 2020

'முன்னெப்போதும் இல்லாத பேராபத்தை உலகம் எதிர்கொண்டு வருகிறது' - பிரதமர் மோடி பேச்சு

நாட்டில் பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று 6 மணி நேர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

'முன்னெப்போதும் இல்லாத பேராபத்தை உலகம் எதிர்கொண்டு வருகிறது' - பிரதமர் மோடி பேச்சு

நாட்டு மக்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து உரையாற்றும் பிரதமர் மோடி.

ஹைலைட்ஸ்

  • முன்னெப்போதும் இல்லாத பேரபாயத்தை உலகம் எதிர்கொள்கிறது
  • ஒவ்வொரு நாடுகளும் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன
  • பொது முடக்கம் குறித்து இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்
New Delhi:

முன்னெப்போதும் இல்லாத பேராபத்தை உலகம் எதிர்கொண்டு வருவதாகவும், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் வீழ்த்தப்படவில்லை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

நாட்டில் பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று 6 மணி நேர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுகுறித்து இன்று நாட்டு மக்களுக்கு மோடி இரவு 8 மணிக்கு உரையாற்றினார். 

பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது-

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையாக சேதம் செய்து விட்டது. இதுபோன்ற பாதிப்பை நாம் இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். உயிரைக்காக்க ஒட்டுமொத்த உலகமும் போராடிக் கொண்டிருக்கிறது. 

இருந்தாலும் கொரோனா வைரஸ் முன்பு நான் தோல்வியடையவில்லை. கடந்த 4 மாதங்களில் மட்டும் உலகம் முழுவதும் 42 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.75 லட்சம்பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவிலும் ஏராளமானோர் தங்களுக்கு பிரியமானவர்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

கொரோனா பிரச்னை ஏற்பட்டபோது நம்மிடம் ஒரு தனிநபர் பாதுகாப்பு கவசம் கூட கிடையாது. சில என் 95 மாஸ்க்குகள் மட்டுமே இருந்தன. இன்றைக்கு 2 லட்சம் தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் வைத்திருக்கிறோம். 

நாள்தோறும் இந்தியாவில் 2 லட்சம் என் 95 மாஸ்க்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா விவகாரத்தில் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறது. உலகின் மகிழ்ச்சிக்கும், உலக நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் அமைதிக்கும் இந்தியா தொடர்ந்து பாடுபடும். 

இவ்வாறு மோடி பேசினார். 
 

.