மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை இறுதி செய்ய 5 மணி கூடிப் பேசினர்.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி பாஜக தலைவர் அமித்ஷா இருவரும் மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை இறுதி செய்ய 5 மணி கூடிப் பேசினர். அமித் ஷா அமைச்சரவையில் சேர முடியுமா என்பது பற்றிய பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. அமித் ஷா அமைச்சரவையில் இடம்பெறுவது யூகம்தான் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் வரவுள்ளதால் பாஜகவின் ஒருபகுதியினர் அமித் ஷா தலைவராக தேர்தல் பணிகளை ஆற்றவே விரும்புகின்றனர். இந்த மாநிலங்களில் 2020ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லி மற்றும் பீகாரில் 2021 இல் நடைபெறவுள்ளதால் முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.
அமைச்சரவையில் உள்துறை, நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகிய பதவிகளில் முக்கிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அருண் ஜெட்லி உடல்நிலை சரியில்லாமல் உள்ளார்.அதனால் மீண்டும் நிதித்துறை அமைச்சராக வாய்ப்பில்லை என்றும் எனத் தெரிகிறது. இருப்பினும் சில நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சக அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்தினார்.
மேற்கு வங்கம், ஒடிஸா மற்றும் வடகிழக்கு புதிய பகுதிகளில் பிரதிநிதித்துவம் செய்ய மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிகிறது.
பாஜகவின் பீகார் மாநில கூட்டணிக்கட்சியான லோக் ஜன்சக்தி கட்சி சமீபத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.ராம் விலாஸ் பஸ்வான் அந்த கட்சியின் முகமாக பார்க்கப்படுகிறது. அவரின் மகனான சிராக் பஸ்வானுக்கு கேபினெட்டில் இடம் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
வியாழக்கிழமை மாலை ராஸ்டிரபதி பவனில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிம்ஸ்டெக் ( BIMSTEC ) தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.பங்களாதேஷ், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபால் மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
முக்கிய எதிர்கட்சிகளான மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லியின் அர்விந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திர சேகர் ராவ் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.