বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 26, 2019

மகாராஷ்டிரா அரசியல்: நரேந்திர மோடி, அமித்ஷா முக்கிய ஆலோசனை!

Maharashtra: துணை முதல்வர் அஜித் பவார் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

Advertisement
இந்தியா Edited by

Maharastra; மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை குறித்து நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆலோசித்தனர்.

New Delhi:

மகாரஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமித்ஷா ஆகியோர் இன்று காலை தீவிர ஆலசோனை மேற்கொண்டனர். 

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டுமா, என்பது குறித்து ஆலோசித்துள்ளனர். இந்த சந்திப்பை தொடர்ந்தே, தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு முடிவு குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். 

மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், திடீரென ஆட்சி அமைப்பது, ஜனநாயக விரோதமானது என்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்திருந்தன. 

Advertisement

இந்த வழக்கு விசாரணையில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தங்களுக்கு இருப்பதாகவும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்கள் உட்பட 170 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையிலே ஆளுநர் பகத்சிவ் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது. 

இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க காலதாமதம் ஆனால், குதிரை பேரத்திற்கு வாய்ப்பு உள்ளதால் ஜனநாயகத்தை காக்கும் கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. இதுபோன்ற நேரத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதே சரியானதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

இதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினராக உள்ள எம்எல்ஏவை சபாநாயகராக தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement


 

Advertisement