This Article is From May 16, 2019

மேற்குவங்கத்தில் எனது பிரசாரத்தை மம்தா தடுப்பாரா என்று பார்க்கலாம்: மோடி சாடல்

மம்தா தனக்கென்று ஒரு வழி வைத்திருந்தால், அவர் என்னுடைய ஹெலிகாப்டர் கொல்கத்தாவில் தரையிரங்கவும் அனுமதி அளிக்கக்கூடாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Lok Sabha Elections 2019: தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, மம்தாவை கடுமையாக விமர்சித்தார்.

New Delhi:


கொல்கத்தாவில் அமித்ஷா பேரணியில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, மம்தா எனது தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கிறாரா என்று பார்க்கலாம் என பிரதமர் மோடி மேற்குவங்க முதல்வர் மம்தாவை சீண்டியுள்ளார். 

பாஜக மூத்த தலைவர்கள் அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் மேற்குவங்க தேர்தல் பொதுக்கூட்டங்கள் மம்தாவால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 23 தொகுதிகளை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. 

மேற்குவங்கத்தில் எங்கள் கட்சியின் வளர்ச்சியை கண்டு பயந்துபோயுள்ள மம்தா பானர்ஜி, அவரால் முடிந்த அளவு அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.  

கடந்த திங்களன்று, அமித்ஷா விமானம் தரையிரங்க தடைவிதித்த மம்தா, அவரது 3 தேர்தல் பொதுக்கூட்டங்களில், ஒரு பொதுக்கூட்டத்திற்கான அனுமதியையும் ரத்து செய்தார். இதேபோல், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பொதுக்கூட்டத்திற்கும் தடைவிதித்தார். 

இந்நிலையில், வரும் ஞாயிறன்று 7ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கொல்கத்தா விமான நிலையம் அருகில் இன்று மாலை பிரதமர் மோடியின் கடைசி தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 

இதனிடையே, கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை, வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொள்வதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

அதன் காரணமாக, மேற்குவங்கத்தில் இன்று இரவு 10 மணியுடம் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தா, தேர்தல் ஆணையம் மோடிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று குற்றம்ச்சாட்டியுள்ளார். 
 

.