This Article is From Jul 29, 2018

"தொழிலதிபர்களுடன் இருப்பதற்கு நான் அஞ்சவில்லை" - எதிர்க்கட்சிக்கு மோடி பதிலடி

லக்னோவில், 60,000 கோடி ரூபாய் செலவில் உருவாகும் 81 திட்டப்பணிகளின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்

ஹைலைட்ஸ்

  • எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதிலடி
  • நாட்டின் வளர்ச்சிக்கு தொழிலதிபர்களின் பங்கு முக்கியமானது - பிரதமர்
  • லக்னோவில், 60,000 கோடி ரூபாய் செலவில் உருவாகும் 81 திட்டப்பணிகள்
Lucknow:

லக்னோ: மக்களவையில் நடைப்பெற்ற விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஊழலில் ஈடுபடும் நாட்டின் முன்னனி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி நட்பு வைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இன்று, லக்னோவில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “தொழிலதிபர்களுடன் இருப்பதற்கு நான் அஞ்சவில்லை. என்னுடைய நிலையில் நான் தெளிவாக உள்ளேன். பொது வெளியில் அவர்களை சந்திக்க இயலாது. தனிப்பட்ட முறையில் தான் சந்திக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு தொழிலதிபர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்களை ஏன் இழிவுபடுத்த வேண்டும், திருடர்கள் என்று ஏன் அழைக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

லக்னோவில், 60,000 கோடி ரூபாய் செலவில் உருவாகும் 81 திட்டப்பணிகளின் அடிக்கல் நாட்டு விழாவில் முன்னனி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். ஆதித்யா பிர்பா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, அதானி குழு தலைவர் கவுதம் அதானி, எஸ்ஸெல் குழு தலைவ சுபாஷ் சந்திரா, ஐடிசி முதன்மை இயக்குனர் சஞ்சீவ் பூரி ஆகியோர் நிகழ்சியில் கலந்து கொண்டனர்.

இன்று அறிமுகப்படுத்தப்பட்ட திட்டப்பணிகள் மூலம், 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதாக உத்தர பிரதேச மாநில தொழில் துறை அமைச்சர் சதிஷ் மஹானா தெரிவித்தார்.

.